India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு ரூ.64,000 முதல் ரூ.94,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அக்-10-க்குள் இந்த <

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே குயவன் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவராமன். அவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று (அக்.6) குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி விவசாயி பலியானார். இதுகுறித்து காணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற அக்.6 முதல் அக்.17 வரை நடைபெறவிருப்பதால் RTE 25% மூலம் மாணாக்கர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளின் முதல்வர்களை தொடர்பு கொண்டு இதன் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழில் தேர்வு கருத்தியல் தேர்வு நவ.4-ம் தேதியும், செய்முறை தேர்வு நவ.5-ம் தேதியும் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அக்.8-ம் தேதிக்குள் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் ஷேக் அப்துல்லா ரகுமான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.07) ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விரட்டிக்குப்பம் 2.VPRC கட்டிடம், கொணமங்கலம் 3.NTM, பொம்பூர் 4.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், தையூர் 5.தீர்க்க சுமங்கலி திருமண மண்டபம், பிடாரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று அக்.6 மக்கள் குறைதீர் கூட்டம் கூட்டத்துக்கு கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

வெளிநாடுகளில் சென்று படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதை பெற www.bcmbcmw.tn.gov.in/welfschemes-minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், சேப்பாக்கம் சென்னை -5 என்ற முகவரிக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஹேக் அப்துல்லா ரஸ்மான் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.