India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி வட்டம் வி.சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைப்பில் பதிலளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 16, 17 தேதிகளில் வருவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளதால் நிகழ்ச்சி ரத்தானதாக தகவல். மழைக்காலம் முடிந்தவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரு தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாகவும், நாளை அதிக கனமழை செய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (அக்டோபர் 15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் சற்று முன் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மழைக்காலம் என்பதால் ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இருப்பதால் குழந்தைகள், சிறுவர்கள் நீர் நிலைகளில் விளையாட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது முற்றிலும் ஆபத்தை விளைவிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.,
விழுப்புரம் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்பொழுது வெளியிட்டுள்ள பதிவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் காவல் துறையினர் உள்ளனர்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 9498181229 – தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ஆம் தேதி வடலூர், 20-ஆம் தேதி திண்டிவனம், 26-ஆம் தேதி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக தலைமை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் இருந்தனர்.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து ராட்சத மோட்டார் பொருந்திய டிராக்டர்களுடன் சென்னை நோக்கி விவசாயிகள் பயணம் கொண்டுள்ளனர். தாழ்வான இடங்களில் தீங்கும் மழை நீரை அகற்ற இந்த டிராக்டர்கள் பயன்படுத்தப்படும் என தகவல் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை தெரிவிததுள்ளது.
Sorry, no posts matched your criteria.