India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் <

விழுப்புரம் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

இந்தியன் வங்கியில் உள்ள 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க நாளை (அக்.13) கடைசிநாளாகும். இதற்கு B.Tech/B.E, Post Graduate, M.Sc, MBA,MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிறவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.SHAREit

மக்களே G Pay / PhonePe / Paytm பயன்படுத்தும் போது யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். முதலில் https://www.npci.org.in/upi-complaint என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.பின்னர் அந்த பக்கத்தில் உள்ள புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், மொபைல் எண் போன்றவற்றை கொடுத்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது.SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், ரெட்டணை பேரூரில் பழைய காலணி அருகே அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று (அக்.11) மாலை 6 மணியளவில் இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு பனைமரத்தில் இடி விழுந்து தீப்பற்றியது. இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற <

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் பணியிடத்திற்கு (GENDER SPECIALIST) காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும். சமூகப் பணி (அ) சமூகவியல் சார்ந்த முதுகலை பட்டம் பெற்ற 3 வருட அனுபவம் உடைய 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.27ம் தேதிக்குள் இந்த <

விழுப்புரம் மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழில்பிரிவு மாநில அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகளை நேற்று (அக் 10) மாலை நியமித்துள்ளார். அதன்படி, வானூர் இணை அமைப்பாளராக இளங்கோவன், மயிலம் – ரவி, வானூர் மாவட்ட செயலாளராக கௌரிராஜ், ஜீவரத்தினம், திண்டிவனம் – லோகநாதன், ஏழுமலை, செஞ்சி – விஜயன், சசிகுமார், மயிலம் – ஞானசுந்தி, ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் (அ) ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.