India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் எனக்கூறி மேல்மலையனூர் கோட்டப்பூண்டியைச் சேர்ந்த எழிலரசனிடம் ரூ.4.20 லட்சம் என பலரிடம் இருந்து சுமார் ரூ.72 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து இளநரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளாா். பகுதி அல்லது முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும். சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
விக்கிரவாண்டியில், த.வெ.க. முதல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு 5 உள்ளே வரும் வழிகள், 15 வெளியேறும் வழிகள், 4 பார்க்கிங் இடங்கள், பார்க்கிங் முதல் மாநாடு வரை 500+ சிசிடிவி கேமராக்கள், பகுதி வாரியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி வைக்கப்பட்டுள்ளது. பொருட்கள், ஆட்கள் காணாமல் போனால் கண்டுபிடிக்க கண்டுபிடிப்பு பகுதி போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் அருள்மிகு கோடீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுற்றி முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் அறநிலையத்துறை ஆணையர், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், ஓங்கூர் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து, மரக்காணம் அடுத்துள்ள கந்தாடு பகுதியில் உள்ள காணி மேடு – மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது ஊரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 0.0 மில்லி மீட்டர், வானூர் 3 மில்லி மீட்டர், மரக்காணம் 35 மில்லி மீட்டர், செஞ்சி 24 மில்லி மீட்டர், செம்மேடு 2.80 மில்லி மீட்டர், வல்லம் 6 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 82 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 0.0 மில்லி மீட்டர், வளத்தி 6 மில்லி மீட்டர். சராசரியாக 7.28 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில், அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை. ஆனால், பவள விழா கொண்டாட்டம். 2026 தேர்தலில் எனக்கு சீட்டு தருவார்களோ, மாட்டார்களோ என அமைச்சர் பொன்முடி பேசும் அளவிற்கு திமுகவின் நிலவரம் கலவரமாக உள்ளது” என பேசியுள்ளார்.
விக்கிரவாண்டியில் நடந்த நாதக கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கவர்னரை மாற்ற சொன்ன திமுக, இப்போது பாராட்டுகிறது. தற்போது தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான். பாஜகவுக்கு நாங்கள் தான் ‘B’ டீம் என திமுக கூறுகிறது. ஆம், திமுக ‘A’ டீமாக உள்ளபோது, நாங்கள் ‘B’ டீம் தான்” என்றார்.
விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையேயான ரயில் தண்டவாளத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், இன்று காலை 11:45 மணிக்கு புறப்படவுள்ள மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் (06725) விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்பட உள்ளது. மறுமர்க்கமாக, விழுப்புரம் – மேல்மருவத்தூர் பயணிகள் ரயில் (06726) மீண்டும் விக்கிரவாண்டில் இருந்து புறப்பட்டு செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே சனிக்கிழமை வாரஇறுதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.