India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 புதுச்சேரி மதுபானப் பாட்டில்கள் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த<

விழுப்புரம் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை,அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <

தீபாவளி பண்டிகையையொட்டி இளைஞர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்கி சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <

விழுப்புரம் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <

திருச்சி, லால்குடியை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது லாரி கடந்த 2016ம் ஆண்டு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. அந்த லாரிக்கு காப்பீடு செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதற்காக, போலி இன்சூரன்ஸ் ரசீது சமர்ப்பித்ததாக புகார் எழ, நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் செல்லப்பா மீது விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, M.K.மஹால், வீராட்டிக்குப்பம், தீர்க்க சுமங்கலி திருமண மண்டபம், பிடாரிப்பட்டு, சமூதாய கூடம், வேம்பி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், தென்களவாய், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சங்கீதமங்கலம், JVS மஹால், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.