India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் விழுப்புரம் – திருப்பதி விரைவு(16854) ரயில் சேவை, மேம்பால பணியின் காரணமாக இன்று (செப்.02) முதல் செப்.09ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், இந்த ரயில் சேவை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்
விழுப்புரத்தில் இன்று (செப்.01) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார்கள். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. எம்எல்ஏ ஆர். அருள், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 9 பேரும் கூடி அன்புமணி மீதுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதது குறித்து விவாதித்து, அறிக்கை தயார் செய்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
ஆகஸ்ட் 17 அன்று பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் தலைமையில் அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அவர் விளக்கம் அளிக்காத நிலையில், இன்று தைலாபுரத்தில் கூடும் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல், பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் இன்று(செப்.01) கூடுகிறது. அதில் அன்புமணியை பா.ம.கவில் இருந்து நீக்குவதா? அல்லது அவருக்கு வழங்கிய செயல் தலைவர் பதவியை பறித்து அவரது சகோதரி காந்திமதிக்கு வழங்குவதா என்பது குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க <
Sorry, no posts matched your criteria.