India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் ஆட்சியர் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024 மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப் பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு மே மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூன் 6) அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப் பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு மே மாதம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 6) அறிவித்துள்ளார்
விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் அருண் குமார் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் குடியிருப்பு திட்டத்தின்கீழ், இருளர்களுக்கான வீடுகள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் முகமதியார்பேட்டையை சேர்ந்தவர் கமால்பாஷா (40), இவரது மனைவி அல்மாஸ் (25). இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இருவரும், 2வது திருமணம் செய்துகொண்டவர்கள். தம்பதிக்குள் குடும்ப பிரச்சனை இருந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்த அல்மாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மனிதம் காப்போம் குழுவின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கெடார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அய்யனார் என்பவர் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கெடார் கிராம இளைஞர்கள் கலந்துகொண்டு மரக் கன்றுகளை நட்டனர்.
பொன்னங்குப்பம் கிராமத்தில் இன்று அய்யனார் என்பவரது கிணற்றில் ராட்சத கிரைன் மூலம் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாத்தனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த ராஜி ஆகியோர் மீது கிரைன் ரோப் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Sorry, no posts matched your criteria.