Villupuram

News June 14, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News June 14, 2024

5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இதுவரை ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த அக்னி ஆழ்வார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ரமேஷ், திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

News June 14, 2024

டெபாசிட்: சில்லறை காசுகளாக கொண்டு வந்த வேட்பாளர்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று முதல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்கிற வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் டெபாசிட் தொகை செலுத்துவதற்காக பத்து ரூபாய் ஐந்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை கொண்டு வந்திருந்தார். அவற்றை உண்டியல் காசு என்பது போல எண்ணி வருகின்றனர்.

News June 14, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக போட்டி!

image

ஜூலை 10இல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கனவே, திமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. இச்சூழலில் பாமக தேர்தலில் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 14, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் அறிவிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளராக மருத்துவர் அபிநயாவை அறிவித்துள்ளார். இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் மாநில அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10இல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலை 11 மணிமுதல் விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தினந்தோறும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிறு, திங்கள் தவிர்த்து 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ல் நடைபெறும்.

News June 14, 2024

விழுப்புரம் பாஜக ஆலோசனை கூட்டம்

image

விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஜக மாவட்ட பொருளாளர் குமாரசாமி இல்லத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 13) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் ஆற்றவுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 13, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

image

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஈவிஎம் இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றி உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

விக்கிரவாண்டி: திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டமும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டமும் நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் நேரு ஏ.வ வேலு, தாமோ அன்பரசன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுகின்றனர்.

News June 13, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஆட்சியர் ஆலோசனை

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அலுவலர்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பழனி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!