India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பது குறித்து பாமக நாளை (ஜூன் 13) ஆலோசனை. இடைத்தேர்தலில் எப்போதும் போட்டி இல்லை என பாமக ஏற்கனவே கொள்கை முடிவு எடுத்துள்ளது, இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழலில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து பெற்றுள்ள நாதக இந்த இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுமா, மைக் சின்னத்தில் போட்டியிடுமா? அல்லது வேறு சின்னத்தை சீமான் தேர்வு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி சென்னையில் நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்கௌதமசிகாமணி இன்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நிலையான கண்காணிப்பு குழு, மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணி செய்கின்றனர். இந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகனத்தை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய நிலையில், கௌதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.
விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா (மாநில விவசாய அணிச் செயலாளர்) அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றக் கட்சிகளை விட திமுக தேர்தல் பணியை வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை முன்னதாகவே அறிவித்து திமுக தேர்தல் பணியில் உடனே இறங்கியுள்ளது. முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக பொன்முடி மகன் கௌதம சிகாமணியை அறிவித்து திமுக அதிரடி காட்டியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தாடி பாலாஜி அண்மைக் காலமாக பள்ளிக்கூடம் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஊராட்சி பள்ளிக்கு தாடி பாலாஜி பீரோ ஒன்றை அன்பளிப்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இன்று (ஜூன் 11) வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய பொருளாளரும், மேலமங்கலம் மு.ஊராட்சி மன்ற தலைவருமான எம்.ஜே.கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் செ.புஷ்பராஜ் கலந்துகொண்டார். தொடர்ந்து மணமக்கள் நித்யானந்தன்-கீதா இருவரையும் வாழ்த்தினார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், ஊரல் திமுக கிளைச் செயலாளர் நந்தகோபால் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் ஒலக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் இராசாராம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.