India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஈவிஎம் இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றி உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டமும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டமும் நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் நேரு ஏ.வ வேலு, தாமோ அன்பரசன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அலுவலர்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பழனி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நியமன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கண்காணிப்பில் இருந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த பாஜக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 14) காலை 10 மணியளவில் விக்கிரவாண்டி சுபம் திருமண மண்டபத்தில், பாஜக மாநிலச் செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் நடைபெறும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவரதன் நேற்று (ஜூன் 12) டெல்லியில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவராஜ் சிங் சவுக்கானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை மாதம் பத்தாம் தேதி நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்வும் கணினி மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூன் 17 வரை விழுப்புரம் கடலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம் பொறுப்பாளராக கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி நேற்று திமுக தலைமை சார்பில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானை இன்று (ஜூன் 12) வாழ்த்தினார். உடன் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.