Villupuram

News June 18, 2024

விழுப்புரம்: வே2நியூஸ் எதிரொலி… நடவடிக்கை

image

கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கிவந்த நியாயவிலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸில் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டடத்தில் நியாயவிலை கடை இயங்கிவருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

News June 17, 2024

வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த எம்எல்ஏ

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கக்கனூர் ஊராட்சியில் திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இன்று (ஜூன் 17) சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் மாவட்ட கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் இருந்தனர்.

News June 17, 2024

வே2நியூஸ் செய்தி எதிரொலி: அதிகாரிகள் நடவடிக்கை

image

கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கி வந்த நியாய விலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸ்-ல் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டிடத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

News June 17, 2024

விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேகம்

image

விழுப்புரம் மாவட்டம் தென்குச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் கலசம் மீது இன்று காலை 9 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பாலமுருகனை வழிபட்டனர்.

News June 17, 2024

விழுப்புரத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

image

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் திரளாக தொழுகையில் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

News June 17, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாஜக ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், பாஜக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆற்ற உள்ள பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஆனது விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

News June 16, 2024

விக்கிரவாண்டி அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

75.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தென்னமாதேவி (பூத்தமேடு அருகில்) தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உள்ளார்.

News June 16, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேமுதிக புறக்கணிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இடைத்தேர்தல் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

விக்கிரவாண்டி பாமக வேட்பாளருக்கு புதிய நீதி கட்சி ஆதரவு

image

புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு புநீக நல்லாதரவினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்யும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News June 16, 2024

விழுப்புரம் கல்லூரியில் சந்திராயன் திட்ட இயக்குனர்

image

விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சந்திராயன்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!