Villupuram

News July 1, 2024

விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.

News July 1, 2024

அஞ்சல் வாக்கு சேகரிப்பை ஆய்வு செய்த ஆட்சியர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பனையபுரம் ஊராட்சியில், விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 1, 2024

பாஜகவின் உண்மை முகத்தை காட்ட வாக்களியுங்கள்- மு.ஹி. ஜவாஹிருல்லா

image

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று பேட்டியளித்துள்ளதாவது: விழுப்புரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட அலுவலகத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவின் உண்மை முகத்தை வெளிக்காட்ட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். உடன் நிறுவனர் குணங்குடி அனிபா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

News July 1, 2024

உலக வங்கியில் ரூ. 3000 கோடி கடன் 

image

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கோழிப்பட்டு பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவ திட்டங்களுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி மதிப்பீடு தயார் செய்து உலக வங்கியில் கடன் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

News July 1, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

சுதந்திர தின விழாவின் போது சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், தனித்தன்மையுடன் கூடிய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

திருப்பதி ரயில் ரத்து 

image

 திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி- காட்பாடி இடையே இன்று முதல் ஜூலை 31 வரை  ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

விழுப்புரம்: காதர் மொய்தீன் வரவேற்பு

image

விழுப்புரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த காதர் மொய்தீன், திமுக வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பாடுபடும் எனக் கூறினார்.

News June 30, 2024

தேர்தல் செலவினங்கள் குறித்த மாவட்ட ஆட்சியர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா கலந்து கொண்டார்.

News June 30, 2024

தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர்கள்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, அயனம்பாளையம் ஊராட்சியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இன்று (ஜூன் 30) தமிழக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் சக்கரபாணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். உடன் ஜெகத்ரட்சகன் எம்பி, மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

News June 30, 2024

வாக்குப்பதிவு கருவிகள் கொண்டு செல்லும் பணி

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பயன்பாட்டிற்காக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதலாக தேவைப்படும் வாக்குப்பதிவு கருவிகளை (Ballot Unit) கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.

error: Content is protected !!