Villupuram

News July 4, 2024

திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்காக வேட்டி, சேலை வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News July 3, 2024

விக்கிரவாண்டியில் 28 அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம்

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகிய அன்னியூர் சிவா வெற்றி பெற வைப்பதற்காக அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மேற்பார்வையில் 28 அமைச்சர்கள் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனர்.

News July 3, 2024

ஆட்சியரை சந்தித்து மனு வழங்கிய பாமகவினர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் தருகின்றனர். மேலும், அன்புமணி ராமதாஸ் கூட்டத்திற்கு வரவிடாமல், வாக்காளர்களை தடுத்து நிறுத்துவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமகவினர் மற்றும் பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆட்சியர் பழனியிடம் மனு அளித்துள்ளனர்.

News July 3, 2024

திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்காக வேட்டி, சேலை வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

News July 3, 2024

விழுப்புரம்: பதற்றமான பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் அஞ்சமின்றி ஜனநாயக கடமை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில் தொகுதியின் பதற்றமான பகுதிகளில் இன்று போலீசார், மத்திய ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். இந்த அணிவகுப்பு ஏடிஎஸ்பி திருமால் தலைமையில் நடைபெற்றது.

News July 3, 2024

சூடுபிடிக்கும் தேர்தல்: வருகிறார் உதயநிதி!

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாளே உள்ள நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி விக்கிரவாண்டிக்கு வருகிறார். அங்கு அவர் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில் வீதிவீதியாக பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள், திமுக தலைவர்கள் களமாடும் நிலையில் உதயநிதி வருகை அறிவிப்பால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

News July 3, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எந்த விரலில் மை?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த விரலில் மை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தமட்டில் அந்த மை அழியாமல் இருந்தால் இடது கை நடுவிரலிலும், அழிந்திருந்தால் ஆள்காட்டி விரலிலும் வைக்கப்படும் என தேர்தல் துறை பதில் அளித்துள்ளது.

News July 2, 2024

விக்கிரவாண்டி: பாமகவிற்கு ஆதரவு அளிக்குமா அதிமுக?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என நேரிடையாகவே கோரிக்கை வைத்தார்.

News July 1, 2024

அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு சேகரிப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கானை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை என பல சாதனைகளை படைத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.

News July 1, 2024

விக்கிரவாண்டியில் நாதக வாக்கு சேகரிப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா வாழப்பட்டு பகுதியில் மைக் சின்னத்திற்கு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் மகளிர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்க மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று வாக்கு சேகரித்தார்.

error: Content is protected !!