India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு, நாளை மறுநாள் வாக்கு எண்ணும் பணி மற்றும் இதற்கு முன்னர் நடைபெற்ற வாக்குப்பதிவு தொடர்பான கருத்துக்களை ஆட்சியர் பழனி கேட்டறிந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பணியில் ஈடுபட உள்ளனர். 1 துணை கண்காணிப்பாளர்,1 காவல் ஆய்வாளர், 8 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் படையினர் என நாள் ஒன்றுக்கு 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அத்துமீறலை கடந்து பாமக வெற்றிபெறும் என ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கப்பியாம்புலியூரில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டிஎஸ்பி ஒருவர் பாமகவினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். போலீசார் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பாமக 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்” என்றார்/
நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 12, 13) வார இறுதி விடுமுறையையொட்டி, பொதுமக்கள் பலர் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் போளூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள். அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக 370 பேருந்துக்கள் இயக்கப்படும் என விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதியில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை விழுப்புரம் கே.கே.ரோடு, வி.மருதுார், நரசிங்கபுரம், எஸ்.பி.எஸ். நகர், சி.எஸ்.நகர், பிரண்ட்ஸ் நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், ராஜிவ்காந்த நகர், அண்ணாநகர், மணி நகர், சீனுவாசா நகர், பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
பரபரப்பாக நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல், அசம்பாவிதங்கள் இன்றி பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது. மொத்தமாக, 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு இயந்திரங்களை பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி வைக்கப்பட்டன. கடந்த 2019, 2021 தேர்தல்களில் திமுகவினரே வெற்றி பெற்றுள்ள நிலையில், இம்முறை மக்கள் யாரை தேர்ந்தெடுத்துள்ளனர் என 13ஆம் தேதி தெரிந்துவிடும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் மொத்தம் 1,95,495 வாக்குகள் பதிவானது. இதில், ஆண்கள் 95,536, பெண்கள் 99,944, மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் வாக்களித்துள்ளனர். இத்தொகுதியில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு 276 மையங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இத்தொகுதியில் திமுக, பாமக, நாதக என 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், புதுமுக வாக்காளர்கள் என பலரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 64.44 வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1,20,762 நபர்கள் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.