India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த தொகுதிக்கு கடந்த ஜூலை 10 இடைத்தேர்தல் நடந்தது. திமுகவின் அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டநிலையில், இவர்கள் மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், வாகைசூடப் போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜைக்கும் 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர், 1 நுண்பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தபால் வாக்கு எண்ணும் போது இரண்டு மேஜைக்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர், 1 நுண்பார்வையாளர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்வதற்காக 14 கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். இவை அங்கு போடப்பட்டுள்ள தனி அறையில் 2 மேஜைகளில் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 20 சுற்றுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
விக்கிரவாண்டியில் கடந்த 2 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றிருப்பதால், இம்முறையும் திமுக வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. அதேபோல், இந்த தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் இருப்பதால், பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு கணிசமாக உள்ளது. இவ்விரண்டு கட்சிகளுடன் ஒப்பிடும்போது, நாதக-வுக்கு வாக்கு வங்கி அதிகரிக்குமே தவிர வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 10ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்ததையடுத்து, EVM இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. திமுக, பாமக, நாதக என மும்முனை போட்டியாக இருக்கும் என்பதால், எந்த கட்சி விக்கிரவாண்டியைக் கைப்பற்ற போகிறது என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மொத்தமாக 82.48% வாக்குப்பதிவு நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை https://tg.tnsw.in இணைய முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு, நாளை மறுநாள் வாக்கு எண்ணும் பணி மற்றும் இதற்கு முன்னர் நடைபெற்ற வாக்குப்பதிவு தொடர்பான கருத்துக்களை ஆட்சியர் பழனி கேட்டறிந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பணியில் ஈடுபட உள்ளனர். 1 துணை கண்காணிப்பாளர்,1 காவல் ஆய்வாளர், 8 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் படையினர் என நாள் ஒன்றுக்கு 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அத்துமீறலை கடந்து பாமக வெற்றிபெறும் என ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கப்பியாம்புலியூரில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டிஎஸ்பி ஒருவர் பாமகவினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். போலீசார் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பாமக 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்” என்றார்/
Sorry, no posts matched your criteria.