Villupuram

News September 7, 2024

விழுப்புரம் விநாயகர் ரூபாய் நோட்டுகளில் காட்சி

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் விநாயகர் காட்சியளித்தார். இதுமட்டுமல்லாமல் ரூ.20 முதல் ரூ.500 வரையிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு ரூ.60000 பயன்படுத்தப்பட்டது. விநாயகரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

News September 7, 2024

வி.சித்தாமூரில் நாளை சிபிஎம் கிளை மாநாடு

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள வி.சித்தாமூரில் சிபிஎம் கட்சி சார்பில் 4- வது கிளை மாநாடு எஸ்.சந்திரன் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 70- ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன. இதில் மாவட்ட செயற்குழு வேல்மாறன், வட்ட செயலாளர் கணபதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

News September 7, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 7, 2024

தீவிரமெடுக்கும் தவெக மாநாடு பணிகள்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மாநாட்டு தேதியை அக்கட்சியின் தலைவர் நாளை அறிவிக்கவுள்ளார். முன்னர் கூறப்பட்ட செப்.23-ஆம் தேதி மாநாட்டு தேதி அறிவிக்கப்பட்டால், மிகக் குறுகிய காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மாநாட்டை நடத்துவதும் பெரும் சவாலான ஒன்று என அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மாநாடு குறித்த உங்கள் கருத்து?

News September 7, 2024

மூட பழக்கவழக்கங்களை ஒழிக்க சட்டம் இயற்ற எம்பி கோரிக்கை

image

மதுரையில் புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமி ஆடியது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆன நிலையில் இது குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இயற்றியது போல் மூடப் பழக்கங்களைத் தடை செய்யும் சட்டத்தை தமிழ் நாடு அரசு இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News September 7, 2024

லஞ்ச ஒழிப்பு சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

image

திண்டிவனம் சந்தைமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் பேரில் திண்டிவனத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம், ரூ. 25ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

News September 7, 2024

காவல்துறை கேள்விகளுக்கு பதில் கடிதம் வழங்கிய தவெக

image

விஜயின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக காவல்துறையிடம் கடந்த மாதம் 28ஆம் தேதி அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கான பதில் கடிதத்தை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில், முக்கிய நிர்வாகிகள் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். இதில் தவெக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 6, 2024

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு குறித்த தகவல்

image

தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி பதிலளிக்கப்பட்ட மனுவில் சில பதில்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் 85 ஏக்கரில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், சுமார் 1.5 லட்சம் பேர் கலந்துகொள்ளவார்கள். தொண்டர்கள் வந்து செல்ல 14 முதல் 16 வழிகளும், தலைவர்கள் செல்ல 4 வழிகளும் அமைக்கபடவுள்ளது. அனைவருக்கும் அங்கேயே உணவு சமைக்கப்படவுள்ளது. மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறவுள்ளது.

News September 6, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் அதீத மழை பெய்தாலும் அதனை எவ்வாறு எதிர் கொள்வது, தாழ்வான பகுதிகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!