India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி அளித்ததில் எந்த தாமதமும் இல்லை என விழுப்புரம் மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டதற்கு, தவெக தரப்பில் 6ஆம் தேதி பதில் அளித்தனர். இதையடுத்து 8ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது என விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்டச் செயலாளருக்கு பொன். கௌதம சிகாமணி இன்று அறிவித்துள்ளார்.
செஞ்சி அடுத்த கருங்குழி கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சுதாகர் தலைமையில், செஞ்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள் கமலேஷ், கார்த்திக் ஆகியோர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் இரண்டு புதிய கல்வெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டுகள் 700 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுகுறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பெறும் பணிகள் உள்ளன. தனிநபர் பண்ணை குட்டை அமைத்தல், தனிநபர் நிலங்களில் மண்வரப்பு மடித்தல், கால்நடைத் தீவன புல் வளர்த்தல், பழமரக்கன்றுகள், அமைத்தல், நாற்று பண்ணை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 7402606336 என்ற எண்ணில் அழைக்கலாம் என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும் பருவமழை, புயலின் போது அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மின்வாரியத்துறை, நீர்வளத்துறை, நெஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். மழைக்கும் முன் மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்ட பின் செய்ய வேண்டியவை குறித்து ஆட்சியர் விரிவாக ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி மற்றும் மாவட்டச் செயலாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளே உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) விழுப்புரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் (தெற்கு) மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் செப் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதமசிகமணி தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு உரையாற்றுகிறார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம், தீவனூர் அருகே உள்ள விழுக்கம் பகுதியில் நேற்று காலை 2 அரசு பேருந்துகள் உரசியதால் விபத்து ஏற்பட்டது. இதில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் வலது கை துண்டானது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், கை துண்டிக்கப்பட்ட யுவராஜ் புதுவை ஜிப்பர் மருத்துவமனையிலும் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.