India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அக்.25 மாலை கார் மோதிய விபத்தில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை கழகச் செயலாளர் ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். மேலும், தலைமறைவாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தங்கள் பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அக்.25 புகார் மனு அளித்தனர்.

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<

விழுப்புரம் நகராட்சியில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமணம் மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதனன் ரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினர் 21 – 40 வயது குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாட்டு பல்கலையில் படிப்பதற்கான கடன் திட்டம் பெற www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க விழுப்புரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <

விழுப்புரம்: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு<

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு இன்று(அக்25) தொடங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பியவர்கள் வயது வரம்பின்றி ரூ.118 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம் என விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜய சக்தி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9442563330, 04146-259467-ஐ அணுகலாம்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆலகிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ராமமூர்த்தி என்பவரை விக்கிரவாண்டி போலீசார் நேற்று(அக்.24) கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 3 1/4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.