India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பத்தைச் சோ்ந்தவர் மீனவா் மணிவண்ணன்(36). இவா் கடந்த 18ம் தேதி ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரைப் பகுதியிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் சென்றபோது கடல் அலையின் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்தாா். புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் <
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், 30 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரேவதி, 27; இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. இவர்கள் மூவரும் கடந்த 24ஆம் தேதிஆட்டோவில் சென்றபோது, சாரம் அருகே கார் மோதி ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரேவதி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.03 2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில், பொதுமக்கள் தங்களது உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே வழங்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.