Villupuram

News October 29, 2024

விழுப்புரம் வரும் துணைமுதல்வர்

image

தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விழுப்புரம் மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி இந்த தகவலை தெரிவித்தார்.

News October 29, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 29) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் இன்று மழை வருமா? கமெண்ட் பண்ணுங்க.

News October 29, 2024

விழுப்புரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

 விழுப்புரம் மாவட்டத்தில், கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதற்கு தேவைப்படும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இந்தாண்டு தீவன அபிவிருத்தித் திட்டம் (2024-25), 3 நிலைகளில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்படுகின்ற வகையில், நீர் பாசன வசதியுள்ள நிலப்பகுதியில் தீவனப் பயிர் செயல்படுத்தப்பட உள்ளது. என விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

News October 29, 2024

விழுப்புரம் ஆட்சியர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

image

தமிழக முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆகிய அரசியல் கட்சிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி வெளியிட்டார்.

News October 29, 2024

துர்நாற்றம் வீசும் வி.சாலை

image

தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 5 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை சாலை ஓரத்தில் வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

News October 29, 2024

முன்னாள் எம்பி இடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

முதலமைச்சர் கோப்பையில் கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட திமுக ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News October 28, 2024

மாநாட்டிற்கு வந்த நிர்வாகிகள் உயிரிழப்பு: விஜய் இரங்கல்

image

விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் போது நிர்வாகிகள் 6 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 28, 2024

5,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கப்பை கிராமத்தில், 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கப்பை கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 5,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

News October 28, 2024

விஜய் மாநாடு குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார்

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் மாநாடு என்பது ஒரு படத்தின் டிரைலர் போன்றது என்றும், முழு நீளக் கதையும் பார்த்த பின்பே படத்தைப் பற்றி சொல்ல முடியும் என்றும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடம் உள்ளது. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி என்பதை பொறுத்திருந்து பார்த்த பின்புதான் கருத்துகள் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.