Vellore

News March 21, 2025

காட்பாடி போலீசார் பணியிட மாற்றம்; வேலூர் எஸ்பி உத்தரவு 

image

காட்பாடி அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக குமரேசன், தனிப்பிரிவு காவலராக ராஜன்பாபு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் பணியில் மெத்தனமாக இருந்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து 2 பேரையும் வேலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி மதிவாணன் நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 20, 2025

வேலூர் CMC கல்லூரியில் வேலை

image

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Senior Resident, Jr. Psychologist உள்ளிட்ட 3 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி: MA, M.Sc (Psychology), MS (Ophthalmology), MD (Dermatology). அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 20, 2025

வேலூரில் மாபெரும் வேலை வாய்ப்பு

image

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளனர். இம்முகாமில் 10,12 மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணியிடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இம்முகாம் மார்ச் 22 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.

News March 20, 2025

டிராக்டர் மீது கார் மோதியதில் தொழிலதிபர் பலி  

image

சென்னை-பெங்களூர் நெடுசாலையில் நேற்று சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதியதில் காரில் பயணித்த சேலம் பகுதியை சேர்ந்த முஹம்மத் யாகூப் (தொழிலதிபர்), முஹம்மத் யூசுப், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரேஷ்மா அவரது 2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முஹம்மத் யாகூப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 20, 2025

விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை

image

குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் கிராமத்தில் நேற்று (மார்ச் 19) ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும், தீப் பந்தங்களை காட்டியும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

News March 19, 2025

வேலூர்: இன்றைய காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 19 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News March 19, 2025

பள்ளிகொண்டா மாடு விடும் திருவிழா டோக்கன் வழங்கல் 

image

பள்ளிகொண்டாவில் மாடு விடும் திருவிழா வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட மாடுகளுக்கு எண் அட்டைகள் வழங்கப்பட உள்ளதால் மாட்டின் உரிமையாளர்கள் எண் அட்டைகளை நேரில் வந்து விழா குழுவினரிடம் பெற்றுக் கொள்ளும்படி செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மாடுகளின் எண் அட்டை பெற தொடர்பு கொள்ள :9092621018 என்ற எண்ணெய் தொடர்பு கொள்ளலாம் என்று விழா குழுவினர் கூறியுள்ளனர்.

News March 19, 2025

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற மார்ச் 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது வழக்கு பதிவு

image

வேலூரில் உள்ள தனியார் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் எஸ்பி மதிவாணனிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரிக்க மகளிர் போலீசாருக்கு எஸ்பி அளித்த உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி துணை முதல்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 19, 2025

பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு; துணை முதலவர் கைது

image

வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன்.இவர் அந்தக் கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!