India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் தொரப்பாடி மத்திய ஆண்கள் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறை காவலர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலியை சேர்ந்த பாண்டி (34) செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாண்டி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் தட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் தரணி இவரது 2 வயது மகள் ஜெயப்பிரியா நேற்று முன்தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். இதுகுறித்து தரணி போலீசில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, சாந்தி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து எஸ்.பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (ஜன 30 ) நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் ஏபி நந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் முகமது சாஹிப் தலைமையில் மாலை 5 மணி அளவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியம் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் நேற்று (ஜனவரி 29) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று (ஜன.29) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்தார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் உடன் இருந்தார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்றுமுன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் சாராய வழக்கில் 31 பேரும், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் 23 பேரும், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட 37 பேரும், மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 5 பேரும், பாலியல் வழக்கில் தொடர்புடைய 8 பேரும், அரிசி கடத்தல் வழக்கில் 5 பேரும் என மொத்தம் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
குடியாத்தம் கல்லேரியைச் சோ்ந்த மேஸ்திரி ராஜேந்திரன் (55) நேற்று கல்லேரி அருகே புதிதாக அமைக்கப்படும் புறவழிச் சாலையில் மொபெட்டில் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் அங்கு சென்ற நகர போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,. விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசை முன்னிட்டு இன்று (ஜனவரி 29) மாடு விடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் 30க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. விழாவுக்கு அனுமதி கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதத்தில் 13 கிராமங்களில் எருது விடும் திருவிழா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.