India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் லோகநாதன், கருணாநிதி, பெரியார் 3 பேருக்கும் வழி பிரச்னையால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று லோகநாதன் மகன் சேகர் பெரியாரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் பெரியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் லோகநாதன், சேகர், விஜயகுமார், உள்பட 7 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
காட்பாடி செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (50) டிரைவர் இவரது மனைவி நாகலட்சுமி கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு சித்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த பாபு தனது தங்கை மகனுக்கு வாட்ஸ் ஆப்பில் நான் மருந்து குடித்து சாகப் போகிறேன் என கூறிவிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வேலூரில் விரைவில் விமான சேவை தொடங்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். உடான் திட்டத்தின்கீழ் சிறு நகரங்களை இணைக்கும் திட்டத்தில் வேலூரில் விமான நிலைய பணிகள் முடிந்து, உரிமம் தொடர்பான பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வரும் 10-ந் தேதி அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் வீடுகள் தோறும் அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது. வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு வட்டாரங்களில், மொத்தம் 4,63,063 பேருக்கு மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 02.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் விருபாட்சிபுரத்தில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பதாக பாகாயம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அஜய்(26) என்ற வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி வருகிற பிப்ரவரி 3-ம்தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி வரி 1.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் மாதிரி பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மகாலிங்கம்,ரமேஷ் குமார் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.