Vellore

News November 8, 2024

ஒரே நாளில் 82 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 8) நடத்திய சோதனையில் 82 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

வீடு கட்ட கூட்டுறவு துறை மூலம் கடனுதவி

image

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கு கூட்டுறவு துறையின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வீடு வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள், கரிகிரியில் உள்ள 50 வீடுகள் மற்றும் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி 75 வீடுகள் உள்ளன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

News November 8, 2024

தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு விடைக்குறியீடு வெளியீடு

image

அரசு தேர்வுகள் துறையால் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்த தேர்வில் 4220 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 8, 2024

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் நாளை ( நவ 9 ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், ஆகியவை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

காரில் 8 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

image

வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று (நவ.7) வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவண்ணாமலை சேர்ந்த ராமராஜன், ரசூல், வேல் ஆகிய 3 பேரை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 8, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் 3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 8, 2024

வேலூர் மாவட்டத்தில் 115 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (நவம்பர் 7) நடத்திய சோதனையில் 115 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை!

image

பொன்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற நிதியாண்டில் நீதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும் என்றார்.

News November 7, 2024

வேலூர் கோட்டையில் இன்று மாலை சூரசம்ஹார விழா

image

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலின் 29ஆம் ஆண்டு சூரசம்ஹார விழா இன்று மாலை சுமார் 7 மணியளவில் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 9.30 மணியளவில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சண்முக பெருமானுக்கு மகா அபிஷேகமும், சத்ருசம்ஹாரதிரசதி சண்முகார்ச்சனை நடக்கிறது. மேலும், 3 மணியளவில் சண்முக பெருமான் போருக்கு புறப்படுகிறார். எனவே கோயில் பகுதியில் காலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

News November 7, 2024

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்!

image

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடக்கிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், நாளை (07.11.2024) வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.