Vellore

News March 26, 2025

வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், பதவி உயர்வு பெற்று, இலங்கை தமிழர் மற்றும் மறுவாழ்வு பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சுஜாதா, கலால் மேற்பார்வையாளராகவும், இதேபோல் மாவட்டம் முழுவதும் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 26, 2025

வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

image

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

வேலூர்: கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 85085 78720, 74017 03483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

வேலூரில் உயர்கல்வி மாபெரும் கருத்தரங்கு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வழிகாட்டி உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த அறிய வாய்ப்பை வேலூர் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஐடி வேந்தர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு கலந்து கொள்ளனர்.

News March 25, 2025

வேலூர் மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யாதவர்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளில் ஆதார் அட்டையுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

News March 25, 2025

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

image

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

மதுபோதையில் தாயை சரமாரியாக தாக்கும் மகன்

image

ஒடுகத்தூர் அருகே, மதுபோதையில் தாயை சரமாரியாக தாக்கிய அருண்குமாரை போலீஸார் கைது செய்தனர். வேலைக்குச் செல்லாமல் மது குடித்து, தன் வயோதிப தாயிடம் பணம் பறித்து வந்த அவர், வீட்டு வாசலில் மோசமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தாயைத் தூக்கில் தொங்கவிட முயன்றதும் தெரியவந்தது. சமூக நலத்துறை மூதாட்டியை மீட்டு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

News March 24, 2025

வேலூர் கோட்டையில் உள்ள நவசக்தி சத்யஜோதி

image

வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிற்பக்கலையின் அற்புதமாக திகழ்கிறது. இக்கோவில், 7 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் பக்தர்களை ஈர்க்கிறது. கோவியிலில் போர்க்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், போன்ற பல கதைகளை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஆமை வடிவ மண்டபம், அழகிய தூண்கள், நந்தி சிலை, 1981 முதல் அணையாமல் எரியும் நவசக்தி சத்யஜோதி விளக்கு, கோவிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யவும்.

News March 24, 2025

வேலூர் ரேஷன் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று (மார்ச் 23) நடந்தது. இந்த பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சத்திய நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி ஆகிய 3 வட்டாரங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!