India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில். சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள பெருமாளுக்கு நெய்விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். இந்த செய்தியை குழந்தை வைத்திருப்பவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<
வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு, பல பரிசுகளை குவித்த பிரபலமான ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார்’ என்ற காளை உடல் நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. இதன் காரணமாக, வேலூர் மாவட்ட எருதுவிடும் திருவிழா உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அந்த காளைக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணீட்டு. ஷேர் பண்ணுங்க
அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன், எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
வள்ளிமலை அருகே திருவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 22). இவர் நேற்று இரவு திருவலத்திலிருந்து வீட்டுக்கு வள்ளிமலை-பொன்னை செல்லும் பிரதான சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் நாகேந்திரன் (17) கல்லூரி மாணவர். இவர்நேற்று அதே பகுதியை சேர்ந்த தனுஷ், என்பவரின் காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்காக நண்பர்களுடன் காவனூர் ஏரிக்கு சென்றனர். அங்கு காளைக்கு நீச்சல் பழகி கொண்டிருந்த போது நாகேந்திரன் திடீரென ஏரியில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.