India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. நேற்றும் (ஏப்ரல் 7) வெயில் 101.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடைகளை கொண்டு செல்லுங்கள். இன்று (ஏப்ரல் 8) முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகொண்டாவில் 70ஆவது ஆண்டு மாடு விடும் விழா நேற்று (ஏப்ரல் 7) நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 250 மாடுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பகுதிகளாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். *இரவில் வெளியே மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தேவைப்படும். கண்டிப்பாக பகிரவும்*
பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காட்பாடியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஏப்ரல் 6) அடிக்கல் நாட்டினார். பின்னர், பேட்டி அளித்த அவர், “2029ஆம் ஆண்டுக்கு பின்னர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பணிகள் தொடங்க உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிச்சயம் அதெல்லாம் நடக்காது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமி, ஒரே சாப்பாடு’ இதெல்லாம் நடக்காது” என கூறினார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 23ஆம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
அரியூரில் இருந்து ஊசூர் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று (ஏப்ரல் 6) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் (35), விக்னேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 23-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.