India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 3ஆம் தேதி திங்கட்கிழமை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 141 பள்ளிகளை சேர்ந்த 7,628 மாணவர்கள், 8,357 மாணவிகள் என மொத்தம் 15,985 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக வேலூரில் 80 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மார்ச் 1-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக் குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 35 வயது முதல் 65 வயது வரை இருக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் நேற்று 106ஆவது ஆண்டு மாடு விடும் திருவிழா நடந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசு 1லட்சம் என மொத்தம் 65 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாடுகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக கடந்த 7 நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பொறுப்பேற்ற ஒருவாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் கூடலூரில் இருந்து செந்தில்குமார் பணியிட மாற்றம் பெற்று வேலூர் வருவாய் கோட்டாட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. இது தொடர்பான வழக்கில் ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் ஹேமராஜ் இன்று (பிப்ரவரி 28) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 28.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண்ணின் தந்தை இன்று (பிப்ரவரி 28) கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (23). இவர் காட்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் பார்க்க சென்றார். அப்போது திடீரென மகேஸ்வரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.