India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாவட்ட மருந்து வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (செப்டம்பர் 18) நடந்தது. இதில் மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதிக டோஸ் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி வழங்க கூடாது. எதிர்கால சந்ததியினரை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என பேசினார்.
குடியாத்தம் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டா- பலமநேரி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அனைத்து வாகனங்களும் இன்று முதல் 20-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 18) வேலூர் மகளிர் திட்டம் சார்பில் ‘கல்லூரி சந்தையை’ மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தொடங்கி வைக்க உள்ளார். இதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர் 17) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 183 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 7 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) 100.4°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடந்த வாரத்தில் 95 டிகிரியாக இருந்த வெயில் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக 75-ம் ஆண்டு பவள விழா இன்று (செப்டம்பர் 17) நடந்தது. இந்த கூட்டத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். இந்த விழாவில் வேலூர் மாவட்டத்தில் இருந்து எம்பி கதிர் ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் ஹோட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செப்டம்பர் 17 பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மதுவிலக்கு மகளிர் மாநாட்டை தேர்தலுடன் முடிச்சு போட வேண்டாம். தேர்தல் நிலைப்பாடு வேறு, சமூகப் பொறுப்புணர்வு வேறு. ஆகவே தோழமைக் கட்சியின் மகளிர் அணி தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என கூறினார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் இன்று (16.09.2024) பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஏ.கட்டுப்படி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் மகளிரிடம் பெருகிவரும் இணையவழி குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க தேவையான வழிமுறைகள் பற்றியும், குழந்தை திருமணம், காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாகவும் விளக்கமளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் மிலாடி நபி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ( செப்1 7 ) விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் நேற்று கடைகளில் குடிமகன்கள் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கினர் இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 114 கடைகளில் வழக்கமாக 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5.20 கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் துன்புறுத்தல் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக நிலை அறிக்கை தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வேலூர் ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்டோரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். வேலூர் சிறை டிஐஜி-யின் பாதுகாவலர் ராஜு, சிறை காவலர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.