Vellore

News September 19, 2024

வேலூரில் அமைச்சர் கூறிய தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் எ.வ. வேலு. செய்தியாளர் சந்திப்பில், மத்திய அரசு தலைமையில் அனைத்து மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ் நாடு மாநிலம் சார்பில் அமைச்சர் என்ற முறையில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்தார் .

News September 19, 2024

வேலூர் அருகே ஆதீனம் வீட்டில் கொள்ளை முயற்சி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். கொல்லப்பள்ளி பகுதியில் வள்ளிமலை ஆதீனம் சிவானந்த வாரியார் சுவாமிகள் குமார மடத்திற்குள் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ஆதீனம் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்ததாக புகார். அதனடிப்படையில் சிசிடிவி காட்சிகள் வைத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 19, 2024

வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 20) காலை 10 மணி முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி ஆகிய கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்.

News September 19, 2024

குடியாத்தம் பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

image

குடியாத்தம் மேல்ஆலத்தூர் பகுதியில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்றிரவு (செப்டம்பர் 18) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களது பைக்கில் 1 கிலோ 600 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். இதையடுத்து கஞ்சா வழக்கில் மனோஜ்ராஜா (27), முஸ்தகின் (27) கைது  இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News September 19, 2024

வேலூர் விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2024-2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.  மாணவர்களின் காலாண்டு தேர்வு காரணமாக செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற இருந்த கையுந்து பந்து, கால்ப்பந்து, கபாடி கோ-கோ, கூடைப்பந்து, இறகுபந்து, கிரிக்கெட் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

வேலூரில் ஓராண்டில் 69 பேருக்கு டெங்கு காய்ச்சல்

image

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் 10 தனிப்படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 69 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்

image

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி மேளா (PMNAM) வருகிற செப்டம்பர் 23-ம் தேதி வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்கள்/உதவிக்கு 0416-2290348 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி நேற்று (செப்டம்பர் 18) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று வேலூரில் மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 18, 2024

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 18)100.4 °F வெயில் பதிவானது. கடந்த வாரத்தில் 95 டிகிரியாக இருந்த வெயில் தற்போது அதிகரித்துள்ளது. மேலும், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உங்க ஏரியால வெயில் எப்படி இருந்தது? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 18, 2024

ஏடிஎஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று ( செப்.18) நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்த குறைதீர்க்க கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை அணுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். கூட்டத்தில் அந்தந்த காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.