India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து ஏதேனும் புகார்கள் தெரிவிக்க கீழே உள்ள விவரங்களை பார்க்கவும்.
குடியாத்தம் 04171-221377, காட்பாடி 0416-2295129, பேரணாம்பட்டு 04171-232289,
அணைக்கட்டு 0416-2276221,கணியம்பாடி 0416-2230223, மேலும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு தொலைபேசி எண்ணிலும் (1800-425-4980) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதை அனைவருக்கும் பகிரவும்

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.
தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரத்குமார் (32). இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளராக உள்ளார்.
Sorry, no posts matched your criteria.