Vellore

News October 10, 2024

வேலூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, வெளியே செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

வேலூர் ரேசன் கடைகளில் வேலை! APPLY பண்ணுங்க

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>‘CLICK’<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News October 10, 2024

ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ள அதிகாரிகள்

image

வேலூர் மேல்மொணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று(அக்.,9) காலை திடீரென ஆய்வு செய்தார். அந்த சமயத்தில் ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தார். வேறு ஆசிரியர்கள் வரவில்லை. இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, பள்ளிக்கு உரிய நேரத்தில் வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

வேலூர் மாவட்டத்தில் 7 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் பிடிஓக்கள் 7 பேரை நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊ) ப.நந்தகுமார், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், இங்கு பணியிலிருந்த ஹேம ஹேமலதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இவர்கள் உள்பட 7 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News October 9, 2024

வேலூர் அரசு மருத்துவமனையில் உதவியாளர் சான்றிதழ் படிப்பு

image

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு சேவை, உதவியாளர் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 25 இடங்கள் உள்ளது. இந்த 3 மாத படிப்பில் சேர வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மருத்துவமனையை நேரடியாக அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 9, 2024

தொடர் விடுமுறை முன்னிட்டு 113 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

ஆயுதபூஜையுடன் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து வேலூருக்கு 60 பஸ்கள், சென்னையில் இருந்து ஓசூர், திருப்பத்தூருக்கு தலா 15 பஸ்கள், வேலூரில் இருந்து பெங்களூருக்கு 8 பஸ்கள், வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 பஸ்கள் என மொத்தம் 113 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் இன்று மாலை முதல் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

News October 8, 2024

வேலூரில் வணிக குறைதீர் கூட்டம்

image

வேலூரில் நாளை வணிக குறைதீர் கூட்டம் மாலை 3 மணி அளவில் வேலூர் வணிக வரி பணியாளர் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேலூர் வணிகவரி மாவட்டத்தை சார்ந்த வணிக பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் குறைகளுக்கு GST தொடர்பான சந்தேகங்களுக்கு உரிய அலுவலர்களிடம் விளக்கம் பெற்று பயன் அடையலாம் என்று இணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

News October 8, 2024

போதை பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம்

image

வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் போதை பொருட்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல்துறையின் 90927 00100 என்ற கைப்பேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம். இந்த எண்ணில் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள் சுயதொழில் ( நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், பழச்சாறு கடைகள்) செய்திட மானியமாக ரூ.50,000/-பெற www.tnwidowwelfareboard.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட சமூக நல அலுவலத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.