Vellore

News May 13, 2024

வேலூர் ஸ்ட்ராங் ரூமை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர்

image

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே.13)  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது

image

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த டெய்லர் ஜெயக்குமார்(48) கடந்த சில தினங்களுக்கு முன் சாக்லெட் தருவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை இன்று (மே 13) கைது செய்தனர்.

News May 13, 2024

அணைக்கட்டு அருகே அபூர்வ நிகழ்வு

image

அணைக்கட்டு வட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி கைலாய நாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று (மே 13) சூரிய ஒளி நேரடியாக சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

News May 13, 2024

10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேட்டில் இன்று (மே 13) ஆட்டு சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு ஆடு 20 ஆயிரம் வரை விலை போனது. மேலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News May 13, 2024

வேலூர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று (மே 13) நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் செலுத்தி கொண்டனர்.

News May 13, 2024

வேலூர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று (மே 13) நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் செலுத்தி கொண்டனர்.

News May 13, 2024

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் வேலூர் மாவட்டத்தில் 3,291 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. 313 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத 3,604 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 13, 2024

நாளை போக்குவரத்து மாற்றம்: வேலூர் எஸ்பி உத்தரவு

image

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நாளை (மே 14)  நடைபெற உள்ளது. இதையொட்டி  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குடியாத்தம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை குடியாத்தம் நகர பகுதிக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News May 12, 2024

வேலூரில் கடும் வெயில்: பொதுமக்கள் அவதி

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 12 )  104.4°F வெயில் பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று 99.7°F வெயில் பதிவான நிலையில் மீண்டும் 100°F மேல் வெளியில் கொளுத்தி வருகிறது.

News May 12, 2024

முன்னாள் முதல்வர் பிறந்தநாள் அன்னதானம்

image

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர் கட்சி தலைமையிலான எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 12) வேலூர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையில் காட்பாடி பார்வையற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!