India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 6 முதல் 1ஆம் வகுப்பு பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது குழந்தை சுஷ்மிதா (1). நேற்று (மே 14) குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் காணாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று (மே 14) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குபியரசன், அப்துல் அத்திக்பாஷா ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள தனியார் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தவர் லாவணிதேவி (17). இவர் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 14) சேண்பாக்கம் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 140 பள்ளிகளில் இருந்து 7762 மாணவர்களும், 8473 மாணவியரும் தேர்வு எழுதினர். இதில் 5764 மாணவர்களும், 7452 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 81.40 சதவிகிதமாகும். 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் 1 அரசுப் பள்ளி அடங்கும் என இன்று (மே 14) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 74.46% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 61.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 83.30 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 74.26% பேரும், மாணவியர் 87.95% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 81.40% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 38வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா இன்று (மே 14) செவ்வாய் கிழமை நடைபெற உள்ளதால் இதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.