Vellore

News May 17, 2024

‘உடனடி தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’

image

வேலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெறவுள்ள உடனடி தேர்வில் கண்டிப்பாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தவறாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தி, நாளை (மே 18) முதல் தேர்வுகள் நடத்தி அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்றார்.

News May 17, 2024

தங்கக் கோவிலுக்கு வந்தே பாரத்தில் வந்த தமிழிசை!

image

முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான தமிழிசை இன்று (மே 17) காலை தனது கணவர் சவுந்தரராஜனுடன், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோவில் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழிசை தனது கணவனுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

வேலூர்: தமிழிசை தங்க கோவிலுக்கு வருகை

image

முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று வேலூர் வருகைதர உள்ளார். காலை 8 மணிக்கு ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக் கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார். பின்னர், சக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறார். இதைத் தொடர்ந்து, குடியாத்தம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

News May 16, 2024

வேலூர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

2023-24ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (16.05.2024) வேலூர் டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளார்.

News May 16, 2024

வேலூர் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி  இன்று (மே 16) ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 16, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

image

வேலூரில் கடுமையான வெயில் நிலவிவந்த நிலையில் மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 15) வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா பகுதியில் அதிகபட்சமாக 9 மிமீ மழை பதிவானது. ஒடுகத்தூரில் 6 மிமீ மழையும், மேல் ஆலத்தூர் 7.20 மிமீ மழையும், பேரணாம்பட்டு 8 மிமீ, கே.வி.குப்பம் 1.20 மிமீ, மாவட்டம் முழுவதுமாக 33.30 மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

வேலூர்: தலையில் கல்லை போட்டு கொலை… கைது!

image

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

News May 16, 2024

வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான  சுப்புலெட்சுமி நேற்று (மே 15) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 15, 2024

6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

image

வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் இன்று (மே 15) காட்பாடி தாராபடவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சிங், தாரத் ராஜாத் என்பதும் பையில் 6 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

News May 15, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 15)  101.7°F வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!