Vellore

News May 18, 2024

வேலூர் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்

image

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வட ஆற்காடு ஓவியர் சங்கம் இணைந்து வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச ஓவிய பயிற்சி முகாம் இன்று (மே 18) நடந்தது. இந்த முகாமை அருங்காட்சியக காப்பாற்றியவர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

News May 18, 2024

கோட்டை கோயிலில் உள்ள பெருமாள் சுவாமி சிறப்பு பூஜை

image

வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.

News May 18, 2024

அங்கன்வாடி மையத்தில்திமுக பிரமுகரின் மகன் அடாவடி

image

வேலூர் மாவட்டம் பெருமுகையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மகன் சரண் என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்தி புகை பிடித்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேலூர் பிடிஓ கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

News May 18, 2024

வேலூர் அருகே துர்கையம்மன் திருவீதி உலா

image

பிரசித்தி பெற்ற சத்துவாச்சாரி ஸ்ரீ சாலை கெங்கையம்மன் அம்மன் திருவிழா வரும் மே மாதம் 21, 22ஆம் தேதிகளில் முத்தரையர் சமுதாயத்தினரால் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு மறுக்காப்பு அணிவித்து பின்னர் இரவு 9 மணிக்கு துர்க்கை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இத்திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

வேலூரில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

image

வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்று (மே 17) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மண்டல இணை இயக்குநர், சென்னை(வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி) பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்‌ அசத்தல்

image

வேலூர்‌ மாநகராட்சி 53வது வார்டில்‌ திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும்‌ வகையில்‌ பா.ம.க கவுன்சிலர்‌ பாபிகதிரவன்‌, வார்டு நுழைவு பகுதிகள்‌‌, பள்ளி பகுதிகள் என‌ பல இடங்களில்‌ 45 சிசிடிவி கேமராக்களை தனது சொந்த செலவில்‌ பொருத்தியுள்ளார்‌. இந்த சிசிடிவி கேமராக்கள்‌ போலீஸ்‌ சூப்பிரண்டு அலுவலகத்தில்‌ இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது வேலூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

News May 17, 2024

சால்வை அணிவித்து மரியாதை செய்த தொண்டர்கள்

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், காக்கா தோப்பு கிராமத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசைக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். குடியாத்தம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அவரிடம் ஆசி பெற்றனர்.

News May 17, 2024

வேலூர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்திய கலெக்டர்

image

வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட சார்பணா மேடு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று (மே 17) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் மண்டல குழு தலைவர் யூசுப் கான் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 17, 2024

‘உடனடி தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’

image

வேலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெறவுள்ள உடனடி தேர்வில் கண்டிப்பாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தவறாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தி, நாளை (மே 18) முதல் தேர்வுகள் நடத்தி அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்றார்.

News May 17, 2024

தங்கக் கோவிலுக்கு வந்தே பாரத்தில் வந்த தமிழிசை!

image

முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான தமிழிசை இன்று (மே 17) காலை தனது கணவர் சவுந்தரராஜனுடன், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோவில் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழிசை தனது கணவனுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!