India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் மின் துண்டிப்பை கண்டித்து வேதனை தெரிவித்து வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து மின் துண்டிப்புக்கான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு உரிய தகவலை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மின் துண்டிப்புகள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65), சலவை தொழிலாளி. இவர் 2 நாள்களுக்கு முன்பு குடியாத்தம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் கிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 20) உயிரிழந்தார்.
குடியாத்தம் எழில் நகரை சேர்ந்தவர் சத்யா (41). தலைவலி காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்ததால் உடல் உறுப்புகள் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம்-மிற்கும், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், சிஎம்சி-க்கும், ஒரு சிறுநீரகம் அரியூர் நாராயணிக்கும் வழங்கப்பட்டது.
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இன்று ( மே 20 ) லோடு ஆட்டோ மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (மே 20) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
காட்பாடியை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவர் நேற்று வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த வேலூரை சேர்ந்த உதயா, வசந்தபுரத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் திடீரென சந்திரசேகரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் உதயா, சூர்யா ஆகிய இருரை கைதுசெய்தனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் நகை, பணம் திருடிவந்த ஆந்திர மாநிலம் சித்திரையை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மே 19) சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது வீட்டில் இருந்து 33 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து பாரதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 19) போலீசார் நடத்திய சோதனையில் 135 மதுபாட்டில்கள், சுமார் 1,750 ரூபாய் மதிப்புடைய 175 கிராம் கஞ்சா, 260 ரூபாய் மதிப்புடைய 126 கிராம் குட்கா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக 24 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
காட்பாடி வெள்ளைகல்மேடு பகுதியில் நேற்று ( மே 19) இரவு காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரனை வழிமறித்து அவரிடமிருந்து 1000 ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட பாஜக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நவீன்குமார் ஆகியோர் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரில் இருவரையும் காட்பாடி போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இன்று (மே 19) காலை எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.