Vellore

News May 22, 2024

போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே 22) நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 22, 2024

வேலூர் பாலமதி மலை பற்றிய தகவல்!

image

வேலூரில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பாலமதி மலைத்தொடர். இந்த மலைத்தொடரில் பாலமதி காப்புக்காடு, ஓட்டேரி ஏரி ஆகியவை சேர்த்து பாலமதி மலைகள் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகள் பல்வேறு வகையான தாவரங்களுடன் இங்கு வாழ்ந்து வருகின்றன. மலை உச்சியில் பாலமுருகன் கோயிலும் உள்ளது. இங்குள்ள ஓட்டேரி ஏரி ஆங்கிலேயர் கால செயற்கை ஏரியாகும். மலையேற்றத்திற்கு சிறந்த மலையாகும்.

News May 22, 2024

வேலூர் நியாய விலை கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

image

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 55வது வார்டு எழில்நகர் பாரி தெரு நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (மே 22) பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர்  ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 22, 2024

வேலூர் வாலிபர் இழந்த சுமார் ரூ.2 லட்சம் மீட்பு

image

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,99,997 மோசடி செய்தனர். இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 199997 ரூபாய் பணம் மீட்கப்பட்டு நேற்று (மே 21) கார்த்திக்ராஜாவிடம் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஒப்படைத்தார்.

News May 22, 2024

வேலூர்: ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

image

வேலூர் மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த பாண்டி, வெங்கடேசன், காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்குட்டுவன் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரும் சேர்ந்து மற்ற கைதிகளை அடிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து சிறை நிர்வாகம் 3 பேரையும் வேறு பிளாக்குக்கு மாற்ற முடிவு செய்தது. இதையறிந்த 3 பேரும் நேற்று பணியில் இருந்த ஜெயிலர் அருள்குமரனை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

News May 22, 2024

வேலூர் எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 21) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 89 மதுபாட்டில்கள், 55 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார். ‌

News May 22, 2024

வேலூர்: குடிசையில் வசிப்பவர்களுக்கு உணவு

image

வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு விறகு அடுப்பில் சமைப்பது கடினம் என்பதால், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுவையான உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சமூக ஆர்வலர் தினேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 21, 2024

பேரணாம்பட்டு பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள்

image

பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கிராமத்தில் இன்று (மே 21) அதிகாலையில் காட்டு யானைகள் அங்குள்ள தோட்டத்திற்குள் புகுந்து  20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

News May 21, 2024

பொய்கை மாட்டு சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (மே.21) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News May 21, 2024

வேலூர் மாவட்டத்தில் திடீரென பலத்த மழை ‌

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சுமார் 12:30  மணி அளவில் திடீரென சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம், வள்ளலார் , ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையில் நனைந்தபடி வாகன ஓட்டிகள் சென்றனர். மேலும் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!