India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோா் பெயரில் மொத்தம் ரூ. 152 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 818 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றிரவு (மார்ச் 26) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே வந்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் வேலூர் எம்பி வேட்பாளர் கதிர் ஆனந்த் உடன் இருந்தார்.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்றிரவு (மார்ச் 26) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தினேஷ் (34), ஜெயபிரகாஷ் (24), அஜித் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபேஷ் குமார் அவர்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 27) சுற்றுலா மாளிகையில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 103 தேர்வு மையங்களில் 9320 மாணவர்கள், 9350 மாணவிகள் என மொத்தம் 18670 பேர் தேர்வு எழுதினர். இதில் 353 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். என வேலூர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுகவில் உள்ள 18 அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 26) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 26) திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் இருந்தது.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பூபதி (51) குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் நேற்றிரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டுள்ளார். இன்று (மார்ச் 26) காலையும் அறையை விட்டு வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, பூபதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.