India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் (மார்ச் 29) இன்று நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இன்று மட்டும் 8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே இது சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மார்ச் 29) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதாகவும் 13 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி என்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று (மார்ச் 28) 100.6°F பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 28) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது மன்சூர் அலிகான் “தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் (திமுக) நீங்கள் தான் வெற்றி பெறப் போகிறீர்கள் ஆனால் வேலூரில் நான் வெற்றி பெறுவேன்” என கூறி வாழ்த்தினார்.
மக்களவை தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேச்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சிகள், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று (மார்ச் 27) நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.