India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 28) அதிகபட்சமாக 105.6°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை மேல்மலையனூருக்கு வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து 30 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்களை இயக்குவதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 17,807 பேர் தேர்வு எழுதினர். 332 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 14 சிறப்பு மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 276 தனி தேர்வாளர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதில் 28 பேர் தேர்வு எழுதவில்லை என வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இன்று (மார்ச் 28) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடங்களும், வருகிற 2-ந் தேதி ஆங்கிலமும், 4-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 7-ஆம் தேதி கணிதம், 11-ஆம் தேதி அறிவியல், 15-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. வேலூரில் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொது தேர்வு தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள்<
திருவண்ணாமலையை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் 17 வயது சிறுமியை கடந்தாண்டு வேலூரில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நேற்று சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், அப்துல்கரீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், தொரப்பாடியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகேசன், 49. இவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் , குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மகன் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கினார். இதனால் அவரது மனைவி, போலீஸ் அவசர எண், 100க்கு போன் செய்தார். இதைப் பார்த்த முருகேசன், போலீஸ் விசாரணைக்கு பயந்து, வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணிக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் சற்று முன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் அனைவரும் ஏதேனும் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.