India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 29) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 267 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இன்று ஒரே நாளில் 15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் அடுத்த பெருமுகை டாஸ்மாக் மதுக்கடை பார் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி போதை ஆசாமிகளால் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலமேலு மங்காபுரத்தை 15 பேரை கைது செய்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நாளை (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 29) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் பட்டப்படிப்பு முடித்த அலுவலக உதவியாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சிட்டிபாபு தலைமையில் ஊழியர்கள் நேற்று (ஏப்ரல் 29) மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரனை சந்தித்து பட்டம் படித்த அலுவலக உதவியாளர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளவாறு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஏப்ரல் 29) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட (ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட) நீதித்துறையில் 53 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலூரில் நேற்று (ஏப்.28) 105.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, 9 பயனாளிகளுக்கு ரூ.8,16,731 மதிப்பில் செயற்கை கால்களை அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ரதிதிலகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தில் மே 1ல் கிராமசபை கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்படும். ஆனால் தற்போதுவரை மே 1 கிராம சபை கூட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்காததால் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.
வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரத்தில் திவ்யா கிளினிக்கில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர் அனிதா, பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் இரத்த அழுத்தம், எலும்பு உறுதி தன்மை (BMD), உடல் பருமன் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யபட்டன. இந்த முகாமில், சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.