India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுகத்தூர் அடுத்த அகரம் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இன்றும், வணிக நிர்வாகவியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கோமதி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (ஜூன் 25) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இன்று (ஜூன் 25) ரயிலில் வந்தடைந்தது. காட்பாடியிலிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர்கள், கிராம பகுதி செவிலியர் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று, காலி பணியிடங்களை உடனே நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இல்லை. வணிகர்கள் மற்ற நாணயங்களை வாங்க நினைத்தாலும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். அரசு பஸ்கள், ஆவின் பாலகங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குடியாத்தத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக 658 மனுக்கள் பெறப்பட்டதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள கிறித்துவ தேவாலயங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ள கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று ஜூன் (24) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.