Vellore

News May 15, 2024

வேலூர் அருகே மணல் கடத்தல்: போலீஸ் விசாரணை

image

பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் காணாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு நேற்று (மே 14) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குபியரசன், அப்துல் அத்திக்பாஷா ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து  தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

News May 14, 2024

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள தனியார் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தவர் லாவணிதேவி (17). இவர் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 14) சேண்பாக்கம் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News May 14, 2024

வேலூர் மாவட்டத்தில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 140 பள்ளிகளில் இருந்து 7762 மாணவர்களும், 8473 மாணவியரும் தேர்வு எழுதினர். இதில் 5764 மாணவர்களும், 7452 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 81.40 சதவிகிதமாகும். 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் 1 அரசுப் பள்ளி அடங்கும் என இன்று (மே 14) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 14, 2024

வேலூர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 74.46% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 61.56 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 83.30 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: வேலூரில் 81.40% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 74.26% பேரும், மாணவியர் 87.95% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 81.40% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 38வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா இன்று (மே 14) செவ்வாய் கிழமை நடைபெற உள்ளதால் இதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும்  ஒரு நாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி  தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

வேலூர் ஸ்ட்ராங் ரூமை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர்

image

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே.13)  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது

image

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த டெய்லர் ஜெயக்குமார்(48) கடந்த சில தினங்களுக்கு முன் சாக்லெட் தருவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை இன்று (மே 13) கைது செய்தனர்.

News May 13, 2024

அணைக்கட்டு அருகே அபூர்வ நிகழ்வு

image

அணைக்கட்டு வட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி கைலாய நாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று (மே 13) சூரிய ஒளி நேரடியாக சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

News May 13, 2024

10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேட்டில் இன்று (மே 13) ஆட்டு சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு ஆடு 20 ஆயிரம் வரை விலை போனது. மேலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!