Vellore

News July 8, 2024

162 இடங்களில் மண் எடுக்க அனுமதி

image

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரி, கண்மாய்கள், குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி ஆண்டிபட்டி 43, பெரியகுளம் 37, தேனி 14, உத்தமபாளையம் 45, போடி 23 என 162 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண் எடுக்க tnesevai.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

மாவட்டம் முழுவதும் 22 பேர் மீது வழக்குப்பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 7)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 44 லிட்டர் கள்ளச்சாராயம், 100 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 300 கிராம் குட்கா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 22 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்‌ என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News July 7, 2024

எஸ் பி தலைமையில் குறைதீர்வு முகாம்

image

வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் டி எஸ் பி திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 6, 2024

எஸ் பி தலைமையில் குறைதீர்வு முகாம்

image

வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் டி எஸ் பி திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 6, 2024

வேலூர்: 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு(ஜூலை 5) தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாகவே இரவில் மழை பெய்து குளிர்ச்சி நிலவுதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News July 5, 2024

வேலூர்: 2701 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 2,847 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில், 2,701 பயனாளிகளுக்கு 19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களும், 146 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை (ஜூலை 6) பொது மக்களின் குறைகளை விரைந்து தீர்க்க குறைதீர்வு சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் காவலர் திருமண மண்டபத்திலும், காட்பாடி நாராயணா திருமண மண்டபத்திலும், குடியாத்தம் ஜீ லட்சுமி ஹயக்ரீவ மஹாலிலும் குறைதீர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News July 5, 2024

20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 20 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூலை 4) உத்தரவிட்டார். அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலக பொது மேலாளராக இருந்த பாலமுருகன், நீதியியல் அலுவலக மேலாளர் பழனி, வேலூர் தாசில்தார் கோபி உள்ளிட்ட 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 4, 2024

20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 20 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) உத்தரவிட்டார். அதன்படி வேலூர் ஆட்சியர் அலுவலக பொது மேலாளராக இருந்த பாலமுருகன், நீதியியல் அலுவலக மேலாளர் பழனி, வேலூர் தாசில்தார் கோபி உள்ளிட்ட 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 4, 2024

முன்னாள் துணை கலெக்டர் உயிரிழப்பு

image

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (89) (ஓய்வுபெற்ற துணை கலெக்டர்). இவர் இன்று (ஜூலை 4) ஓய்வூதியம் பெறுவதற்காக உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!