Vellore

News October 21, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக் 21) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

வேலூரில் வீரவணக்கம் செலுத்திய டிஐஜி

image

பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 21) நடந்தது. இதில், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள காவலர்கள் நினைவுத்தூணுக்கு வேலூர் சரக டிஐஜி தேவராணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

தற்காலிக பட்டாசு கடை அனுமதிக்கு 13 பேர் விண்ணப்பம்

image

வேலூர் மாவட்டத்தில் 94 நிரந்தர பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி கேட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். இம்மனுக்கள் மீது ஆர்டிஓ, போலீஸ், தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஒரு கடைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். மீதமுள்ள 12 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 21, 2024

ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுக்க விண்ணப்பிக்கலாம் 

image

வேலூர் மாவட்டத்தில் பெற்றோர் அல்லாத, ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பைக் திருட்டு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 13 பைக்குகள் திருடுபோனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் தாலுகா காவல் நிலையம், பாகாயம் காவல் நிலையத்தில் 1, வேப்பங்குப்பம் 1, குடியாத்தம் தாலுகாவில் 7, மேல்பட்டியில் 3 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 பைக்குகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

வேலூர் அரசு பஸ் மீது மோதி பைக் மோதி விபத்து 

image

வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (28) இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு பணி முடித்துவிட்டு இன்று காலை பைக்கில் வீடு திரும்பினார். கருகம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு டவுன் பஸ்சின் பின்புறம் இவரது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2024

காட்பாடி ரயிலில் கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

காட்பாடி ரயில்வே போலீசார் நேற்று பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்துடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும் அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 20, 2024

சிறப்பு குறைதீர்வு முகாமில் 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்தது. முகாமில் மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 197 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளன. முகாமில் அதிகபட்சமாக 77 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 66 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 20, 2024

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

image

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற பயிலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய http://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய மத்திய அரசின் இணையதளங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

வேலூர் மாவட்டத்தில் 81 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 19) நடத்திய சோதனையில் 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.