India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் நெல்லூர் பேட்டையில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமியிடம் முகாம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அதில் விவசாய பணியின் போது உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மேயர் சுஜாதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வள்ளலார் 2015-ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அதை மீண்டும் பல்வேறு வசதிகளுடன் கொண்டுவர ரூ.25 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆடிக் கிருத்திகையையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு செல்ல பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் 29ஆம் தேதி வரை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி வேலூரில் இருந்து 90 பேருந்துகளும், சோளிங்கரில் இருந்து 25 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 40 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
25-ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நேற்று வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வீர வணக்கத்துடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் கார்த்தியாயினி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டார். மேலும் மாவட்டத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (ஜூலை 27) வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தெரிவித்துள்ளார். எனவே இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 15 பேரின் 13 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதோடு, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூலை 26) தெரிவித்துள்ளார்.
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் மேம்படுத்தப்பட்ட கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, டிஆர்ஓ மாலதி, ஆர்டிஓக்கள் கவிதா, சுபலட்சுமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, துணை கமிஷனர் சசிகலா, உதவி கமிஷனர் ஜெபக்கிறிஷ்டோபர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆட்சி செய்து மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்கின்றனர்.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை பென்டெலண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள தொழிலாளர் மாநில காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.