India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 1) நடத்திய சோதனையில் 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பொது சுகாதார நோய் தடுப்பு துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தீவிரத் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று (ஜூலை 31) குழந்தை கடத்தப்பட்டது. இது குறித்து வேலூர் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு பெங்களுரில் குழந்தை இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் பெங்களூர் விரைந்து சென்று குழந்தை திருடி சென்ற நபரை கைது செய்து, குழந்தையும் மீட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு பணியில் இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் 134 பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். இன்று (ஆக 1) முதல் பழங்குடியின மக்கள் வசிக்கும் 271 வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று 7,958 குடும்பங்களில் உள்ள 20,941 மக்களை நேரடியாக சந்தித்து சமூக பொருளாதார நிலை குறித்து கணக்கெடுக்க உள்ளனர் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் தாலுகா, அணைக்கட்டு தாலுகாவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய விஏஓக்கள் பணியிட மாற்றம் செய்து ஆர்டிஓ கவிதா நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் விஏஓ சுப்பிரமணி சத்துவாச்சாரிக்கும் , அங்கு பணியாற்றிய சீனு நெல்வாய்க்கும் இதேபோல் 2 தாலுகாவிலும் மொத்தம் 29 விஏஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 31) சோதனையி ஈடுபட்டனர். அப்போது 20 மதுபாட்டில்கள் மற்றும் 200 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பாலமதி ஊராட்சியில் நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (ஜூலை 31) வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்காதது கண்டித்தும், ED, IT, சிபிஐ அனுப்பி எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பாஜக அரசு கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
வேலூர் CMC மருத்துவமனையில் Technician Trainee, HLPT Technician போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு<<-1>><<-1>> www.cmcvellore.edu <<>><<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்டு 12-ஆம் தேதி வரை பெறப்படுகின்றன. தங்களுக்கு தெரிந்த வேலை தேடும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்து பிறருக்கு உதவலாம்.
Sorry, no posts matched your criteria.