Vellore

News August 3, 2024

வேலூர் விஐடியில் 8562 மாணவர்களுக்கு பட்டமளிப்பு 

image

விஐடியில் 39ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று(ஆகஸ்ட் 2) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மொத்தம் 8,205 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மற்றும் 357 முனைவர் பட்டம் அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கு விஐடி வேந்தர் கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். உடன் துணைவேந்தர் ஜிவி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

மகப்பேறு வார்டு உள்ளே செல்வதற்கு ஆதார் கட்டாயம்

image

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் “சீமான்ஸ் ” (மகப்பேறு வார்டில்) உள்ளே செல்வதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கட்டாயம் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.

News August 3, 2024

வேலூர் டெங்கு பாதிப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

image

வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்கு உட்பட்ட 57 வது  வார்டில் சி.எம்.சி. காலனியில் டெங்கு பாதித்த நபரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஆகஸ்ட் 3) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 610 கிராம் கஞ்சா பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஆகஸ்ட்  2) நடத்திய சோதனையில் 26 மதுபாட்டில்கள் மற்றும் 610 கிராம் கஞ்சா முதலியவை பறிமுதல் செய்தனர். மேலும், ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

வேலூர் மாவட்டத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

வேலூர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த விஜய், நெடுஞ்செழியன், விக்னேஷ் மற்றும் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொலை குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருள்பாண்டியன், வேலு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று(ஆகஸ்ட் 2) உத்தரவிட்டார்.

News August 2, 2024

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு

image

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கான தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட்.2) நடந்தது. இக்கருத்தரங்கில் கலெக்டர் சுப்புலட்சுமி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜவேலு,  மாவட்ட சுகாதார அலுவலர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

காட்பாடி அருகே 29.14 கோடி மதிப்பில் சாலை மேம்பாலம்

image

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 2) காட்பாடி மற்றும் லத்தேரி இரயில் நிலையங்களுக்கு இடையே 29.14 கோடி மதிப்பில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார். காட்பாடி ஒன்றியகுழுத்தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

சென்னை – காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

image

வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை – காட்பாடி இடையே நாளை நடைபெறவுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் வழியாக 11.55 மணிக்கு காட்பாடியை அடையும். காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 2, 2024

ஊஞ்சல் சேவையை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

image

ஆடி அமாவாசை ஊஞ்சல் சேவையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையன்று ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலம் சார்பில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வேலூரில் இருந்து 50 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்களும் இயக்கப்படுகிறது என வேலூர் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

News August 2, 2024

குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்துக்குள் மீட்பு

image

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்டது. வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல் நடந்த 24 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்ததில், இடையன்சாத்து பகுதியை சேர்ந்த வைஜெயந்தி மாலா என்பவர் கடத்தியது தெரிய வந்தது.

error: Content is protected !!