India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வேலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்தற்கான வாரண்ட் அவரிடம் வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும், வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரன் தற்போது சிறையில் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் நாளை காலை 8.30 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போதும், பயணங்களின் போதும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 9) வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 89,235 வழக்குகள், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 6,436 வழக்குகள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,50,534 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியில் இன்று தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமெண்டில் குறிப்பிடவும்.
1,250 டன் புழுங்கல் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) காலை காட்பாடிக்கு ரெயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இம்மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை ரேஷன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வந்த மதிவாணன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்ட்டுள்ளார். ஏற்கெனவே, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றம் செய்ப்பட்டுள்ளார். ஆனால், அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.